Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கணவனை தலையில் கொட்டிய விஜய் சேதுபதி பட நடிகை. பிரபலங்களின் வீட்டிலும் அடி விழும்போல

niharika

தெலுங்கு சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் உள்ளனர். அதில் குறிப்பாக சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா, என்டிஆர் போன்ற அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் தற்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரது  தம்பி மகளான நடிகை நிஹாரிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இவரது கணவர் யார் என்றால் குண்டூர் ஐஜி மகனான சைதன்யா ஜொன்னலகட்டா ஆவார். 

நிஹாரிகாவின் திருமணத்திற்காக ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது குடும்பங்களுடன் தனி விமானத்தில் சென்றனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது, மட்டுமின்றி கல்யாண நிகழ்ச்சியில் நிகாரிகா உடன் இணைந்து நடனமாடும் வீடியோவும் வெளியாகி அதுவும் வைரலானது.

யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருக்கும் உதய்நிவாஸ் அரண்மனையில் நடைபெற்றது. நடிகைகளைப் பொறுத்தவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த ஒரு செயலாக இருந்தாலும் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது ஒன்றும் புதிதல்ல, அந்த வகையில் நிஹாரிகா அவரது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

niharika

niharika

முதல் புகைப்படத்தில் குடத்திலிருந்து மோதிரத்தை எடுப்பது போன்றும். மற்றொரு புகைப்படத்தில் கணவருடன் அன்பை வெளிப்படுத்துவதை போன்றும் மேலும் கணவனை செல்லமாக கொட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

niharika

niharika

அதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் முடிந்த அடுத்த நொடியே கணவனை அடிப்பது இது ஒன்றும் புதிதல்ல என பதிவு செய்து வருகின்றனர். எது எப்படியோ நம்ம வீட்டில்தான் இப்படி நடக்குதுன்னு பார்த்தா பிரபல நடிகர் நடிகைகளின் வீட்டிலும் இப்படித்தான்  அடி விழுகும் போல

niharika

niharika

Continue Reading
To Top