பொதுவாக நடிகர், நடிகைகள் இரவு விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாசாரம் வேரூன்றி விட்டது.

அந்த பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில் அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு.

ரிலாக்ஸ் பார்ட்டி என்று இதற்கு பெயர் வைத்துள்ளார்கள். வாரம் ஒரு முறை.. அல்லது தினமும் ஸ்டார் ஹோட்டல்கள், பண்ணை வீடுகள் என்று கூடுகிறார்கள்.

இதில் திரையுல முன்னணி ஹீரோயின்களும் கூடுவது லேட்டஸ்ட் ஸ்டைல். இரவு பதினோரு மணிக்கு கூடும் இவர்கள் மதுவகைகளை வரச்செய்து ரிலாக்ஸாக அமர்ந்து பேசியபடி தான் ஆரம்பிகிறார்கள்.

அதிகம் படித்தவை:  தினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த ஒரு புஷ்டி நடிகை : ஐயோ எத்தனை பெண்களின் வாழ்க்கையில்...?

அப்புறம் ஆங்கிலப் பாடல்கள் ஒலிக்கிறது. வண்ண வண்ண விளக்குகள் என களை கட்ட ஆரம்பிகிறது. ஆட்டம் பாட்டம் என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

உடம்பும் மனசும் ரிலாக்ஸ் ஆகும் வரை ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டி அதிகாலை மூன்று மணிவரை இந்த ஆட்டம் நீடிக்கிறது.

சிலர் அதிக மயக்கத்தில் அப்படியே சாய்ந்து விடுவதும் உண்டு. அவ்வப்போது சண்டைகளும் வந்து விடும் என்கிறார்கள்.

காரணம் அந்த இரவு நேரப் பார்ட்டிகளில் நடிகர்கள் அல்லாத வசதிபடைத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் வந்து விடுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை பாடல் வீடியோ

இங்குதான் சண்டைகள் வந்துவிடும் என்கிறார்கள். அப்போது ஹோட்டல் நிர்வாகத்திற்கு பெரும் சங்கடங்கள் வந்துவிடும்.

வேறு வழியே இல்லாமல் போலீஸ் வந்து விலக்கி விடும் சூழ்நிலை வந்து விடுகிறது என்கிறார்கள்.

இந்த பிரச்சனைகள் காரணமாக இப்போதெல்லாம் கலையுலக இரவு நேரப் பார்ட்டிகள் இடம் பெயர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலைகளில் உள்ள பண்ணை வீடுகளில் நடக்கிறதாம். சரி அங்கும் அவர்களுக்குள் சண்டை வராதாயாமறியோம் பராபரமே..