fbpx
Connect with us

Cinemapettai

இந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.

News | செய்திகள்

இந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா

குவாண்டிகோ தொடரின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த பிரியங்கா சோப்ரா, அங்கு பாடகர் நிக் ஜோனாஸுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். நிக் ஜோனாஸுடன் பிரபல திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் இவர் போஸ் கொடுத்தது, இவர்களது நெருக்கத்தை உலகுக்குத் தெரியப்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஒன்றாகக் காணப்பட்ட இந்த ஜோடி காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

Priyanka Chopra Nick Jonas

அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா திரும்பிய பிரியங்கா, தன்னுடன் நிக் ஜோனாஸையும் அழைத்து வந்திருந்தார். கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகப் பறந்த இந்த காதல் ஜோடி, அம்பானி கொடுத்த பார்ட்டியிலும் ஜோடியாகக் கலந்துகொண்டனர். இது பாலிவுட் திரையுலகினரைப் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. காரணம், பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ், 10 வயது இளையவர் என்பதே.

டிசம்பர்-1 அன்று திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரண்மனையில் ஒருநாள் வாடகை 43 லட்சம் அந்த அரண்மனையில் 347 அறையில் உள்ளன.

Priyanka Chopra Nick Jonas

இவர்களின் திருமணம் ஆனது நான்கு நாட்கள் விமர்சையாக ஹிந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி நடக்க உள்ளது.

நேற்று இந்தியா வந்தார் நிக். அதனை கொண்டாடும் வகையிலே தன ட்விட்டரில் போட்டோ வெளியிட்டார் பிரியங்கா. மேலும் தனது உறவினர்களுடன் நிக்குக்கு விருந்தும் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top