மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நியா சர்மா சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நியா சர்மா. அவர் ஜமாய் ராஜா உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முத்தம்

வெப் சீரியஸுக்கு நியா சர்மா சக நடிகையான இஷிதா சர்மாவுக்கு லிப் டூ லிப் கொடுத்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த காட்சியால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நியா

முன்னதாக நியா சர்மா அறைகுறை ஆடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டது மற்றும் ஜமாய் ராஜா தொடரில் தன்னுடன் நடித்த ரேனா மல்ஹோத்ராவை முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

குடும்பம்

இப்ப என்ன நடந்துவிட்டது? நான் இஷிதாவுக்கு லிப் டூ லிப் கொடுத்தது குறித்து என் குடும்பத்தாரோ, நண்பர்களோ கண்டுகொள்ளவில்லை. இது சாதாரணம் என்று அவர்களுக்கு தெரியும் என்கிறார் நியா சர்மா.

லெஸ்பியன்

இஷிதாவுக்கு முத்தம் கொடுத்ததால் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அது நடிப்பு அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையில் நடப்பதை தான் திரையில் காட்டுகிறார்கள் என்று நியா தெரிவித்துள்ளார்.