Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதுப்பேட்டை படத்தை சுட்டுட்டாரா செல்வராகவன்.. ஆதாரத்துடன் வச்சி செய்யும் நெட்டிசன்கள்
NGK: புதுப்பேட்டை படத்தை சுட்டுட்டாரா செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் NGK இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்பு செல்வராகவனை ரசிகர்கள் டீசர் எப்போது ரிலீஸ் ஆகுமென டுவிட்டரில் கேட்டு வந்துள்ளார்கள்.
பின்பு தயாரிப்பு தரப்பிலிருந்து டீஸர் காதலர் தினமான பிப்ரவரி 14 ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள் அதேபோல் இன்று டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக அமைந்து விட்டது.
டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் சூர்யாவை ஒரு புதுவிதமாக பார்ப்பது போல் இருக்கிறது என்றும், எங்களின் எதிர்பார்ப்பை பக்காவாக சூர்யாவும் செல்வராகவனும் முழுமையாக பூர்த்தி செய்துள்ளார்கள் என்றும், நீண்ட காலமாக காத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இது செம விருந்து எனவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது இணையதளங்களில் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது, அந்த மீம்ஸில் தற்பொழுது ரிலீஸாகி இருக்கும் சூர்யாவின் ngk டீசரின் சில காட்சிகளையும், செல்வராகவன் இயக்கி மெகா ஹிட்டான தனுஷின் புதுப்பேட்டை படத்தின் காட்சிகளையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டுள்ளார்கள் இதோ அந்த மீம்.

suriya memes
