Tamil Cinema News | சினிமா செய்திகள்
லுங்கியில் மாஸ் காட்டும் சூர்யா.! NGK ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக்.! அதிர்ச்சியாகும் படக்குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா இவருக்கு தமிழ் நாடு மட்டும் இல்லாமல் கேரளா,ஆந்த்ரா என பல மாநிலங்களில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இவர் தான சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்பொழுது செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி கிடக்கிறது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் தலைப்பிற்கே அர்த்தம் புரியாத நிலையில், இப்படம் எந்த மாதிரியான கதை என்று தெரியாத நிலையில், பலரும் பலவித கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா லுங்கியுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கே அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த புகைபடம் தற்பொழுது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
