Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா செல்வராகவன் படத்தில் ரசிகர்கள் குழம்பும் NGK என்றால் என்ன.?
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெடியாகும் சூர்யாவின் 36 படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ஜனவரி 1-ஆம் பட பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

surya
சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிக்கவுள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். இசை யுவன் ஷங்கர் ராஜா.
சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகப் பிரம்மாண்டமான செட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் 5-ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருந்தனர். அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Dear all! Need your love for #NGK
Director @Selvaraghavan !! A very Happy birthday!!#NGKdiwali2018 #Suriya36@Sai_Pallavi92 @Rakulpreet @thisisysr @prabhu_sr @RelianceEnt @DreamWarriorPic pic.twitter.com/uVb42EJOgb— Suriya Sivakumar (@Suriya_offl) March 5, 2018
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வந்ததும் வந்தது கூடவே ரசிகர்களுக்கு ஒரு குழப்பும் வந்துவிட்டது.
படத்தின் டைட்டில் NGK என வைத்துள்ளார்கள், அதே போல் பர்ஸ்ட் லுக்கில் சூர்யா செகுவார் கெட்டப்பில் இருக்கிறார் அதை சுற்றி கைகள் வரைபடங்கள் இருக்கிறது. இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் கம்னியூசம் பேசும் படமாக இருக்க அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ngk
மேலும் சில ரசிகர்கள் இது மெட்ராஸ் போல ஒடுக்க பட்ட மக்களுக்காக போராடும் படமாக NGK இருக்கும் என கூறுகிறார்கள், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் NGK என்றால் என்ன? இது தான் அனைவரின் கேள்வியும்?
பலரும் கம்னியூசம், ரஷ்யா, சேகுவாரா, கார்ல் மார்க்ஸ் என அனைவரின் பெயருடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டனர் இன்னும் இதற்கான விடை தெளிவாக கிடைக்கவில்லை.
மேலும், ஒரு சில ரசிகர்கள் இது சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் சுருக்கம் என்றும் கூறி வருகின்றன, இதனால் எல்லோரும் ஒரு தகவலை சொல்ல ஆனால் படக்குழு என்ன விளக்கம் தான் தருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
