fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் விஜயால் ஸ்தம்பித்த நெய்வேலி.. மிரண்டுபோன அரசியல் கட்சியினர்.. வீடியோ

vijay-01

Tamil Nadu | தமிழ் நாடு

மாஸ்டர் விஜயால் ஸ்தம்பித்த நெய்வேலி.. மிரண்டுபோன அரசியல் கட்சியினர்.. வீடியோ

விஜய் மற்றும் பட தயாரிப்பாளர் மீது வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அமைதியாக நடக்க வேண்டிய வருமான வரி சோதனையை வேண்டுமென்றே விஜய்யின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து மிகவும் கடுமையான முறையில் நடந்துகொண்டனர். இதற்கு தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.

வருமானவரி சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்ற முடியவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது. ஏதோ கட்சியின் சூழ்ச்சியால் தான் விஜய் வீட்டில் சோதனை திடீரென அரங்கேறியது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் வீட்டில் எதுவும் கிடைக்காத பின்னர் நேரடியாக மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் திடீரென ஒரு கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

இதனாலேயே அவரின் மீது ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மெர்சல் சர்கார் படங்களின் போது அவர்களின் கோபம் வெளிப்படையாகத் தெரிய வந்தது. தனக்கு நடைபெற்ற வருமான வரி சோதனையை சல்லி சல்லியாக உடைத்து விட்டு மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பு களத்தில் இறங்கி உள்ளார் விஜய்.

இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ்டர் படப்பிடிப்பை பார்ப்பதற்கு குடும்பம் குடும்பமாக வந்த ரசிகர்களைப் பார்த்து மிரண்டு போனார் தளபதி. நெய்வேலி ரசிகர்களின் வீடியோ

நேற்று நெய்வேலி பகுதி ரசிகர்களால் ஸ்தம்பித்து போனதை விஜய் ரசிகர்கள் #விஜயால்_ஸ்தம்பித்த_நெய்வேலி என்பதை ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மெரினா பீச்சில் குவிந்திருக்கும் மக்கள் அலை போல ரசிகர்களை பார்த்து தனது புன்னகையால் வரவேற்ற தளபதியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆடியோ லான்ச்க்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்து இவரை வருமான வரியில் சிக்கிவிட்ட அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மைதான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top