fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த ஆண்டில் இருந்து இதை நான் கண்டிப்பாக செய்வேன்..!!சிவகார்த்திகேயன் அதிரடி பேச்சு

Sivakarthikeyan-Velaikkaran

News | செய்திகள்

அடுத்த ஆண்டில் இருந்து இதை நான் கண்டிப்பாக செய்வேன்..!!சிவகார்த்திகேயன் அதிரடி பேச்சு

சந்தோஷ்சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கும் த்ரில்லர் படமான வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது.

கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் தம்பிராமையா போன்ற பெரும் நட்சத்திர நடிகர்கள் வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கின்றனர்.

sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் படத்திற்கு எப்போதும் இசை அமைக்கும் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெமோ படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா-வே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடந்துவரும் நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார்.

மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

sivakarthikeyan

தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அவர், தீபாவளின்னாலே பட்டாசு தான் முதல்ல வரும்.

அதனால் உங்க பிள்ளைங்களை பாதுகாப்போடு பட்டாசு வெடிக்க சொல்லுங்க. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லுங்க என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, நான் பத்திரிகைகளை சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது. ஆனால் இனிமேல் வருடத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

sivakarthikeyan

ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அப்படி ஆகிறது.

ஆனால் அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்களை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு படங்களை தேர்வு செய்வேன் என்றார் சிவகார்த்திகேயன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top