Connect with us
Cinemapettai

Cinemapettai

மரண மாஸ் என்ட்ரி கொடுக்கும் தளபதியின் நண்பன்.. எதிர்பார்ப்பை கிளப்பிய வீடியோ

Priyanka

Videos | வீடியோக்கள்

மரண மாஸ் என்ட்ரி கொடுக்கும் தளபதியின் நண்பன்.. எதிர்பார்ப்பை கிளப்பிய வீடியோ

ரசிகர்களின் பேராதரவோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல அதிரடியான திருப்பத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் அபிஷேக் மற்றும் நடன இயக்குனர் அமீர் இருவரும் வைல்ட் கார்டு என்ட்ரியாக அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரையில் பிரபல நடிகரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக சில நாட்களாக செய்திகள் பரவி வந்த நிலையில் இன்று அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சஞ்சீவ் நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு பிரபல தொகுப்பாளர் ஆவார். இடைவிடாமல் வேகமாக பேசி நிகழ்ச்சியை நடத்துவதில் அவர் திறமையானவர். இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் டிவி வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே நுழையும் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தாலும் அனைவரும் தங்களது அன்றாட வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். மீறி நீங்கள் ரியாக்ட் செய்தால் நேரடியாக எவிக்சன் பட்டியலில் சேர்க்கப் படுவீர்கள் என்ற அறிவிப்பை கொடுக்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் ஒரு வித எதிர்பார்ப்புடன் தங்களது வேலைகளை செய்கின்றனர். அப்போது வீட்டுக்குள் கையில் கேக் உடன் சிலர் வருகிறார்கள். போட்டியாளர்கள் அவர்களை கவனித்தும், கவனிக்காதது மாதிரி தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள்.

அப்போது திடீரென வீட்டின் மெயின் டோர் திறக்கப்படுகிறது முந்திரிக்கொட்டை பிரியங்கா யாரோ வருகிறார்கள் என்று ஆர்வத்துடன் கத்திக் கொண்டே செல்கிறார். அத்துடன் ப்ரோமோ காட்சிகள் முடிவடைகிறது.தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top