fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவரே? வெளியான அதிர்ச்சித் தகவல்!

kamal-bigboss-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவரே? வெளியான அதிர்ச்சித் தகவல்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் கடந்த மூன்று வாரமாக ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் ஆகியவர்கள் வீட்டைவிட்டு மக்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது இதில் ஷிவானி, பாலாஜி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன்,  ஆஜித், கேப்ரியலா, சுசித்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வாரம் எவிக்சன் ப்ராசஸில் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இரண்டு முறை நாமினேட் ஆன ஆஜித் ஒரு முறை  எவிக்டான நிலையில், அவரிடம் எவிக்சன் பாஸ் இருந்ததால் தப்பித்துக் கொண்டார். இதிலிருந்து அவருக்கு மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது என தெளிவாக தெரிகிறது.

மேலும் ஆஜித் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைந்த  போட்டியாளராக இருப்பதால் மக்கள் மனதை கவர தவறிவிட்டார்.

aajith-cinemapettai

aajith-cinemapettai

எனவே ஆஜித் இந்த வாரம் மக்களின் ஆதரவைப் பெற்று வீட்டிலேயே இருப்பாரா இல்லை வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top