fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபிஎல் தொடங்கும் முன்னரே விலகிய அடுத்த சி எஸ் கே வீரர்! ஐயா நீங்க இல்லாம நாங்க

csk-team

Sports | விளையாட்டு

ஐபிஎல் தொடங்கும் முன்னரே விலகிய அடுத்த சி எஸ் கே வீரர்! ஐயா நீங்க இல்லாம நாங்க

கொரானாவின் பயத்தால் தான் துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை மாற்றினார்கள். எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுப்பினர்கள் சிலரை வைரஸ் தாக்கியது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஒபெநிங் வீரர் ருத்ராஜ் கைக்கவாட் மற்றும் 12 சப்போர்டிங் ஸ்டாப் சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சின்ன தல ரெய்னா நாடு திரும்பி விட்டார். மேலும் இந்த சீசன் ஆடமாட்டார் அவர். மேலும் தனிமைப்படுத்துதல், பப்பில் வாழ்க்கை, மன அழுத்தம், குடும்பத்தை மிஸ் செய்ததே ரெய்னா திரும்புவதற்கான முக்கிய காரணம் என்றனர்.

ஒருபுறம் சீனிவாசன் ரைனாவை கடுமையாக சாடினார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் எனது குடும்பம். அப்பாவை போன்றவர் ஸ்ரீனி என ரெய்னா பேசினார். இந்த சீசன் ரெய்னா ஆடுவார் என்கின்றனர் நெருங்க வட்டத்தில் உள்ளவர்கள்.

நேற்று ஐபிஎல் 2020-லிருந்து முழுதும் விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.  நிர்வாகமும் அவருக்கு ஆதரவாக பேசி அவரின் முடிவை ஆதரித்துள்ளது.

harbajan csk tweet

40 வயதாகும் ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசனில் 24 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குறிப்பாக தோனிக்கு பவர் பிலே சமயத்தில் நல்ல உறுதுணையாக இருந்தார். சாவ்லா, தாஹிர், கரண் சர்மா, ஜடேஜா, சாய் கிஷோர், சான்டனர் ஆகியோர் டீம்மில் உள்ளனர். எனினும் ஆப் ஸ்பின் வீச பௌலர் இல்லாதது குறை தான்.

ஹர்பஜனின் தமிழ் ட்வீட் இருக்குமா அல்லது இல்லாமல் போகுமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top