ஆலியா சஞ்சய் தொடர்ந்து ஜோடி சேரும் அடுத்த சீரியல் பிரபலங்கள்.. காதலியால் விலகும் பாரதி!

சினிமா பிரபலங்கள் யார் யாரை காதலிக்கிறார்கள், யார் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொள்வார்கள். அந்த வகையில் தற்போது டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத் மற்றொரு சீரியல் நடிகையை காதலித்து வருவதாக தெரிகிறது.

எனவே ராஜா ராணி1 சீரியலுக்கு பிறகு அந்த சீரியலில் ஒன்றாக நடித்த ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் காதலித்து ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி2 சீரியலில் வில்லியாக அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜே அர்ச்சனா மற்றும் அருண்பிரசாத் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிறது.

மேலும் அவர் சொல்லித்தான் அருண்பிரசாத் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகப் போவதாகவும், அவருக்கு பதில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய், பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

ஏற்கனவே இந்த சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்ட நிலையில் தற்போது கதாநாயகனும் மாறப்போவதால் நிச்சயம் சீரியல் டல் படிக்கும். மேலும் அருண் பிரசாத்துக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வருவதாலும் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தெரிகிறது.

எனவே அருண் பிரசாத்-அர்ச்சனா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும், அவர்களுடைய காதல் கதைகளை குறித்தும் சின்னத்திரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

Next Story

- Advertisement -