Connect with us

Cinemapettai

OTT கொடுத்த அதிரடி OFFER.. அடுத்தடுத்து 50 படங்கள் ரிலீஸ்! வயிற்றெரிச்சலில் தியேட்டர்காரர்கள்!

ott-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

OTT கொடுத்த அதிரடி OFFER.. அடுத்தடுத்து 50 படங்கள் ரிலீஸ்! வயிற்றெரிச்சலில் தியேட்டர்காரர்கள்!

சுமார் ஆறு மாத காலமாகவே கொரோனா சூழலால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி தளத்திலேயே படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

படத்திற்கு இவ்வளவு என தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து வந்த ஓடிடி தளம், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஃபேவராக ‘ஒரு பார்வையாளர்களுக்கு கட்டணம்’ என்ற புதிய முறையால் அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளது.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்கின்ற மனநிலைக்கு வந்துள்ளனர் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் என்னதான் திரையரங்குகள் கூடிய விரைவில் திறந்தாலும் மக்கள் திரையரங்கை தேடி வர கொஞ்ச நாள் எடுக்கும் என்பதால் தற்போது திரையிட தயாராகி இருக்கும் 90 படங்களில் குறைந்தது பாதிக்குப் பாதி படங்களை ஓடிடிதளத்தில் ரிலீஸ் செய்யும் கட்டாயத்தில் உள்ளனர்.

ஏனென்றால் வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் திணறி வருவதால், தங்கள் படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஓடிடி தளத்தையே தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த மூன்று மாதங்களிலேயே ஐந்து படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதேபோல் 25 படங்கள் இதே முடிவை எடுத்துள்ளது.

மேலும் 25 படங்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிகிறது. ஆக மொத்தம் 50 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு வரிசைகட்டி காத்திருக்கிறது.

தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும்னு, நீங்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்திருக்கின்ற அந்த படமும் OTT தளத்திலேயே வெளியாவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

ஓடிடி தளத்தை தேடி செல்லும் தயாரிப்பாளர்களை பார்த்து கொஞ்ச நாள் கூட பொறுக்க முடியாத அவசரக்குடுக்கைகள் என திட்டி தங்கள் ஆத்திரத்தை தீர்த்து வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top