Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜீத் படத் தயாரிப்பாளரை காவு வாங்கப் போகும் ஹிப் ஹாப் தமிழா ஆதி.. கும்பிடு போட்ட சுந்தர் சி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்படும் இவரது படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் முதலாக சுந்தர் சி இயக்கிய விஷால் நடித்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதியை அப்படியே விட்டிருந்தால் அவருக்கும் நல்லது.
கூடப்பிறந்த தம்பி போல் என தன்னுடைய சொந்த தயாரிப்பில் மீசைய முறுக்கு எனும் படத்தை எடுத்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து நட்பேதுணை எனும் படத்தை எடுத்தார்.
அந்த படம் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இதனை ஈடுகட்ட மீண்டும் ஹிப் ஹாப் தமிழா ஆதியை வைத்து நான் சிரித்தால் எனும் மொக்கை படத்தை எடுத்தார். இந்த படமும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இனி ஹிப் ஹாப் தமிழா ஆதியை வைத்து படம் தயாரிக்க போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். இதனால் வருத்தத்தில் இருந்த ஆதிக்கு கைகொடுத்துள்ளது தல அஜித் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவி இயக்குனர் சந்தோஷ் என்பவர் இயக்க உள்ளாராம்.
