தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் இருக்கிற இடைவெளி புரியாதவர்கள்தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் அந்நிறுவன முதலாளி எஸ்.எஸ்.சரவணன் இமேஜ் மீது சேறு வாரி பூசுவார்கள். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. தானுண்டு, தன் நம்பிக்கை உண்டு என்று நாள்தோறும் புதுப் புது ஸ்டெப்புகளை பழகி வருகிறார். விட்டால், டான்ஸ் மாஸ்டர்கள் தினேஷ், லாரன்ஸ் மாதிரி திறமைசாலிகளுக்கே தின் பண்டம் கொடுப்பார் போலிருக்கிறது. அந்தளவுக்கு ஸ்டெப்புகளில் தெறிக்கிறது வித்தை.

இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்க வந்துவிடுவாரோ என்கிற அச்சம், அவரது லேட்டஸ்ட் விளம்பரத்தை பார்த்த நாளிலிருந்தே நாட்டில் நிலவி வருவதையும் மறுக்க முடியாது. இத்தனைக்கும் “எனக்கு சினிமாவில் நடிக்கறதுல விருப்பம் இல்லே” என்று கூறியவர், “எனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை நான் கூப்பிடவில்லை’ என்றும் தெரிவித்துவிட்டார்.

இந்த நயன்தாரா பஞ்சாயத்து இருக்கட்டும்… அவருடன் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னாவுக்குதான் கடும் வருத்தமாம். நடிக்க வர்றதா முடிவு பண்ற நேரத்தில், அவர் மனசுக்குள் ஏன் நயன்தாரா வரணும். இமேஜ் பார்க்காமல் அவருடன் ஆடிய நாமல்லவா வந்திருக்க வேண்டும் என்றும் கேட்கிறாராம்.

கடைசியாக ஒரு கன்குளுஷனுக்கு வந்திருக்கிறார் டான்ஸ் இளவரசன் எஸ்.எஸ்.சரவணன். அதென்னவாம்? நடித்துவிடுவது என்பதுதான் அந்த கன்குளூஷன். அந்த விளம்பரத்தை கேலி செய்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது போல அமைந்துள்ளதாம் விரைவில் வரப்போகும் அடுத்த விளம்பரம்.

அதில், தமன்னா எஸ்.எஸ்.சரவணனை பார்த்துச் சொல்லும் முதல் டயலாக்கே “வாங்க ஹீரோ” என்பதுதானாம்.