விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் தான் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பார்சிலோ கிளம்பி சென்றார் விஜய். இப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்தநாளையொட்டி (செப்., 21) மாலை சரியாக 6மணிக்கு வெளியிடப்பட்டது.

அதிகம் படித்தவை:  ரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.! சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.!

“நீ பற்றி வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உன்னை கேட்கும். நீ விதை வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்…” என்ற வசனத்துடன் விஜய்யின் மெர்சல் டீசர் வெளிவந்தது.

விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் காமெடியனாக வடிவேலு இறங்கியுள்ளார்.mersal audio teaser 1

மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தவர்  எஸ்.ஜே. சூர்யா இவர் விஜய்யுடன் வில்லனாக முதன் முதலில் நடித்துள்ளார். இவர் பேசுகையில் நடிகர் விஜய் முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா துறையில் இருந்து எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக உருவாகி இருக்கிறார்கள். தற்போது, ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக பேசிவருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தெலுங்கு சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் மார்க்கெட் மற்றும் ஹிட் நிலவரம் இதுதான்

அதேபோல், நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதனிடையே சினிமா துறையில் இருந்து மீண்டும் தமிழக முதல்வர் உருவாவதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சினிமா துறையில் இருந்து முதலமைச்சர் ஆக கூடாது என்று சட்டமா உள்ளது. இவர் வரலாம் வரக்கூடாது என்ற சட்டம் உள்ளதா?. இது சுதந்திர இந்தியா. யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் ஆகலாம்.

நல்லது பண்ணனும். தரமாக பண்ணனும். ஒரு சிறந்த முதலமைச்சராக விஜய் வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறோம். அவருடன் பழகி இருக்கேன். தனக்கு கொடுத்த வேலையை பொறுப்பாக செய்வார். நல்ல எண்ணம் கொண்டவர். ஒரு நண்பராக விஜய் முதலமைச்சர் ஆனால் மகிழ்ச்சி” என்றார்.