Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் வீட்டிற்கு Wildcard முறையில் உள்ளே வரும் பிரபல விஜய்டிவி நடிகை.. குஷியில் ரசிகர்கள்

bigg-boss-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்கு Wildcard முறையில் உள்ளே வரும் பிரபல விஜய்டிவி நடிகை.. குஷியில் ரசிகர்கள்

ஏற்கனவே விஜய் டிவியின் பிரபலங்களான கவின் மற்றும் சேண்டி மாஸ்டர் இருப்பதால் இப்பொழுது வர இருப்பது மூன்றாவது விஜய் டிவியின் போட்டியாளர்கள் என்றே கூறலாம்.

ஆலியா மானசா விஜய் டிவியின் பிரபல சீரியலில் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இவருக்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்த பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் ஆலியா மானசா தற்போது தன் கணவனுடன் மாலத்தீவில் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதை முடித்து விட்டு 17ஆவது போட்டியாளராக களமிறங்குவதாக தெரிகிறது.

ஆலியா மானசா சீரியல் மட்டுமல்லாமல் டப்ஸ்மாஷ் இன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு விஷயம் என்னவென்றால் இவர் வரவில்லை என்றால் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாம். இன்னும் யார் யாரெல்லாம் உள்ளே வருகிறார்கள் என்று பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top