அடுத்த 4 வாரம் பிக்பாஸில் இதுதான் சம்பவம்.. அதிக பணத்தை வெல்லும் போட்டியாளர் இவர் தான்

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை நடந்த சீசன்களிலேயே இதுதான் மோசமான சீசன் என்று சொல்லும் அளவுக்கு தான் இந்த நிகழ்ச்சி பெயர் வாங்கி இருக்கிறது. இத்தனைக்கும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அத்தனை பேருமே திறமையானவர்கள் தான். தனியாக விளையாடாமல் தங்களுக்குள் ஃபேவரைட்டிசம் பார்த்ததால் தான் இப்போது வெத்துவேட்டாக இருக்கிறார்கள்.

இதுவரை நடந்த சீசன்களில் 70 நாட்களைக் கடந்தாலே யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்ற கணிப்பு தோன்றிவிடும். ஆனால் இந்த சீசனில் அப்படி யாரையுமே கணிக்க முடியவில்லை. அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் போன்றவர்கள் ஒரு வாரம் நல்ல பெயர் வாங்கி கொண்டாடப்பட்டாலும், அடுத்த வாரம் தங்களுடைய பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் சரவண விக்ரம் கூட டைட்டில் வாங்க வாய்ப்பு இருக்கிறது என பார்வையாளர்கள் கிண்டலாக பேசி வருகிறார்கள்.

அடுத்த நான்கு வாரம் நடக்க இருக்கும் சம்பவம்

பேமிலி ரவுண்டு: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதளவில் எதிர்பார்க்கப்படும் ரவுண்டு தான் பேமிலி ரவுண்டு. போட்டியாளர்களின் குடும்பத்தை பார்க்க பார்வையாளர்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். அதேபோன்று இந்த ரவுண்டின் போது ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களின் குடும்பத்தை பார்த்து சில நேரங்களில் மனம் மாறிய சம்பவமும் நடந்தது உண்டு.

Also Read:பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு கமல் மேல் அப்படி என்னதான் காண்டு?. மனப்பாடம் பண்ணி மாட்டிக்கொண்ட ஆண்டவர்

டிக்கெட் டு பினாலே: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடினமான விளையாட்டு டிக்கெட் டு பினாலேவுக்கு நடத்தப்படும். இரவு பகல் பார்க்காமல் கண் விழித்து பசியோடு இந்த போட்டியை போட்டியாளர்கள் விளையாடுவார்கள். இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வதற்கான இந்த டிக்கெட்டை பிக் பாஸ் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு வழங்குவார்.

மணி டாஸ்க்: இறுதிப் போட்டி நெருங்கும் வேளையில் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்கள் முன்வைத்து எடுத்து செல்ல விருப்பம் இருப்பவர்கள் காசை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பை கொடுப்பார். பெரும்பாலும் எல்லா சீசன் களிலும் இந்த டாஸ்க் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்திருக்கிறது. இந்த சீசனில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்பது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இறுதி போட்டி: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் 4 அல்லது 5 போட்டியாளர்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் கண்டிப்பாக மூன்று பெண் போட்டியாளர்கள் இறுதிவரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Also Read:பிக்பாஸ் மாயாவுக்கு வந்த திடீர் வலிப்பு.. உலக அழகியை அசிங்கப்படுத்திய உள்ளூர் கிழவி

- Advertisement -spot_img

Trending News