லாரி கிளீனராக வேலை செய்யும் நட்சத்திர வீரர்.. கோடிக்கணக்கில் சம்பாதித்த பணம் என்ன ஆச்சு?

90களில் நியூஸிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கியவர் கிறிஸ் கெயின்ஸ். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் எப்பொழுதுமே மற்ற அணி வீரர்களுக்கு சவாலாக விளங்குவார். இந்திய வீரர்களுக்கு கிறிஸ் கெயின்ஸ் ஒரு பெரிய தலைவலியாக இருப்பார்.

நியூசிலாந்து அணியில் 1989ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை விளையாடினார். கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் நியூசிலாந்து அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தனது அணிக்காக பல்வேறு போட்டிகளில் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியை தேடித்தந்துள்ளார். கிறிஸ் கெயின்ஸ் 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Family-Cinemapettai.jpg
Family-Cinemapettai.jpg

தன் ஓய்வுக்குப்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த கிறிஸ்கெயின்ஸ், இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சண்டிகர் லயன்ஸ் அணிக்காக விளையாடிய கெயின்ஸ் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி, அப்போது ஐபிஎல் பொறுப்பில் இருந்த லலித் மோடி மூலம் விளையாட தடை செய்யப்பட்டார்.

கெயின்ஸ் தனக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 2012ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.  அதன்பின் தன் அணியில் விளையாட கூடிய சக வீரர்களான வின்சென்ட் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரையும் சூதாட்டத்திற்கு அழைத்ததன் காரணமாக மற்றும் ஒரு வழக்கை சந்தித்தார். பின் இந்த வழக்கில் இருந்தும் 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

கிறிஸ் கெயின்ஸ் தன் மீதுள்ள நியாயத்தை நிரூபிக்க கோர்ட், கேஸ் என்று கிரிக்கெட்டில் தான் சம்பாதித்த அனைத்தையும் செலவழித்து விட்டார். அதன்பின் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்ட அவர் ஆக்லாந்தில் உள்ள லாரிகள் பணிமனையை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுவிட்டாராம். அங்கே அவருக்கு ஒரு மணிநேரத்திற்கு 15 டாலர்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.

Cains-Cinemapettai.jpg
Cains-Cinemapettai.jpg

பல போராட்டங்களை கடந்து வந்த கிறிஸ் கெயின்ஸ் தற்போது இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் அவருடன் விளையாடிய சக வீரரான டியன் நாஸ் அவருடைய கஷ்ட காலத்தில் அவருக்கு பெரிதும் உதவி செய்துள்ளார். தற்போது கிறிஸ் கெயின்ஸ் ஆபத்தான கட்டத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Chris-cains-Cinemapettai.jpg
Chris-cains-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்