World | உலகம்
நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல்.. உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
இதனைப்பற்றி தமிம் இக்பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் வெலிங்டன் நடந்து கொண்டு வருகிறது. இதில் பங்களாதேஷ் வீரர்கள் மசூதிக்கு தொழுகை செய்ய போயிருந்தன.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 27 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் உலக அளவில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பங்களாதேஷ் வீரர்களை நேரடியாக தாக்குவதற்கான இலக்கா என்பது இன்னும் வெளிவரவில்லை. பங்களாதேஷ் வீரர்கள் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
இதனைப்பற்றி தமிம் இக்பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,
