காதலனை பற்றி மேடையில் ஓபனாக பேசிய கண்மணி.. கொடுத்து வச்சவரு, வயித்தெரிச்சலில் சிங்கிள்ஸ்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். இந்த சீரியலில் நவீன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக இருக்கிறது என்றும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்றும் பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நவின் சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலிப்பதாக அறிவித்தார். இது இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் இவர்களின் காதல் செய்தி பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் நவீன் பிந்துவை காதலிக்கவில்லை என்ற ஒரு ஏக்கமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் நவீன் மற்றும் கண்மணி இருவரின் குடும்பத்தினரும் நீண்டகால நண்பர்களாக இருக்கின்றனர்.

அந்த நட்பின் அடிப்படையில் தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் வரை வந்துள்ளது. தற்போது நவீன் மற்றும் கண்மணி இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் பேசிய கண்மணி என் அப்பாவைப்போல் ஒருவர் எனக்கு கிடைத்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரின் திருமணமும் கூடிய சீக்கிரம் நடக்க இருப்பதாகவும் திருமண பத்திரிக்கை கூட தயாராகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் ரசிகர்கள் அனைவரும் இவர்களின் திருமண அறிவிப்பை தற்போது எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.