Tamil Nadu | தமிழ் நாடு
சிவாஜி வீட்டு விருந்தில் கலந்துகொண்ட பிரபல நடிகர்.. அவர் கட்சியின் தலைவரும் கூட
நடிகர் சிவாஜி வீட்டில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகருமான கமல்ஹாசனுக்கு விருந்து அளித்துள்ளனர். கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி வருவதால் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட சிவாஜி குடும்பத்தினரை அழைப்பதற்கு நேரிலேயே சென்றுள்ளார் கமலஹாசன்.
சிவாஜி வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை நடிகர் பிரபுவும் அவருடைய குடும்பத்தாரும் வரவேற்று விருந்து கொடுத்து தன்னுடைய பிறந்தநாள் அன்று பொதுக்கூட்டத்திற்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதை ஏற்றுக் கொண்ட சிவாஜி குடும்பத்தினர் பிரபு தன் கைப்பட எழுதி கமல்ஹாசனுக்கு கவிதையுடன் கூடிய ஒரு பரிசை அளித்துள்ளார். அந்தக் கவிதையில்
அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி.
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலகநாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு வாழ்ந்திடுக நூறாண்டு!
அன்புடன் அன்னை இல்லம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
என்று ஒரு கவிதையுடன் பரிசளித்து அன்புடன் விடைபெற்று சென்றுள்ளார்.
