India | இந்தியா
கல்கி பகவான் ஆசிரமத்தில் சோதனை.. சிக்கிய கோடிகள் எவ்வளோ தெரியுமா?
இன்று உலக அளவில் தொழிலதிபர்களை விட சாமியார்கள் தான் பல கோடி கோடியாய் வைத்துள்ளார்கள். இதில் கல்கி பகவான் ஆசிரமத்தில் அதற்கு உட்பட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
இதில் 1500 கோடி ரூபாய் சொத்துக்கள் கணக்கில் காட்டாமல் வாங்கியது தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் இந்தியா பணமும், 10 கோடி ரூபாய் வெளிநாட்டுப் பணமும் சிக்கியுள்ளது.
பெங்களூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமான நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பகவான் மகன் கிருஷ்ணா வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிற்சாலை நடத்திவருகிறார். இன்னும் உறவினர்களின் பெயரில் வாங்கிய சொத்துக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள்.
சுமார் 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்ததுடன் உறவினர் பெயரில் வாங்கிய சொத்துக்களை குறித்து சோதனை செய்து கொண்டு வருகிறார்கள்.
