fbpx
Connect with us

இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் – மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா

News / செய்திகள்

இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் – மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துப்பறிவாளன்.படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறிதாவது, தற்போது உருவாகிவரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசரை மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாகும்.

இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ஷெர்லாக் ஹோம்ஸ்” மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “துப்பறியும் சாம்பு” போன்ற ஒரு கதையாக இருக்கும். தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை “துப்பறிவாளன்” நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.

விஷால் இப்படத்தில் “கணியன் பூங்குன்றன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனார் அவர்களின் பெயரை தான் இப்படத்தின் கதாநாயகனுக்கு வைத்துள்ளேன். இப்படத்தில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமான கதாபாத்திரமாகும்.

படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்கவைக்கும் சண்டை காட்சிகள், இதனோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் இது தான் துப்பறிவாளன் ஸ்பெஷல்.

தெலுங்கில் பிரபலமான அணு இம்மானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

ஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்த போது தம்பி விஷால் என்னிடம் துப்பறிவாளன் திரைப்படத்தை பொறுத்தவரை இசை வெளியிட்டு விழாவுக்கு பதிலாக ஆக்சன் வெளியீட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்வோம் என்று வித்தியாசமான ஒரு ஐடியாவை என்னிடம் கூறி அசரவைத்தார்.

அந்த அளவுக்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என்றும் விஷாலும் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top