சாய் பல்லவி என்கிற ரசிகர்களின் விருப்பமான மலர் டீச்சர் தமிழில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் கரு என்ற திரில்லர் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான நடிகரான நாக சௌர்யா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.நாக சௌர்யா அப்பாயிதோ அம்மாயி, கல்யாண வைபோகமே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.