Connect with us

Cinemapettai

எனக்கு நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையை பாருங்க.. தமன்னா கலகல

tamannaah

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையை பாருங்க.. தமன்னா கலகல

திருச்சியில் மலபார் ஜூவல்லரி திறப்புவிழா நடிகை தமன்னா ஷோருமை நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சினிமா துறையில் நடிகைகள் மத்தியில் நிலவும் முன்னணி நடிகை யார் என்ற பந்தயத்தை நான் பார்த்ததே கிடையாது. புதிதாக நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. எனக்கு நேர்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். புதிதாக ஏதாவது கொடுத்து எனது தரத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறேன். அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல .நல்ல தரமான படங்களே முக்கியம்.

நான் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ‘பெட்ரோமாக்ஸ்’மாதிரியான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நடிகர்கள் தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். அது நல்ல விஷயம் தான் அதனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கலாம்.

மீம்ஸ் போன்றவை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கவேண்டும் அதை சீரியஸ் ஆக பற்கக்கூடாது. நடிக்க வருவதற்கு வயது ஒரு தடை கிடையாது. நல்ல படம் யார் செய்தாலும் நன்றாக இருக்கும். எனக்கு திருமணம் செய்ய நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கூறுங்கள். நாங்கள் பணம் வாங்கி கொண்டு நடிக்கிறோம். அது எங்களது வேலை.

டிக்டாக் போன்றவற்றை மகிழ்ச்சிக்காக செய்யலாம். ஆனால், அதில் அபாயகரமான விஷயங்களை செய்யக் கூடாது. என்னிடம் வரும் கதைக்கு ஏற்ப தான் நடிக்கிறேன். நான் தற்போது ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.நான் தற்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறன். அது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதனால் அது குறித்த தகவல்களை தெரிவிக்க இயலாது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top