Tamil Nadu | தமிழ் நாடு
ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை திருடிய நித்யானந்தா? போலீஸ் புகார் அளித்த மக்கள்
வழக்கமா பொண்ணுங்களை தான் திருடுவாரு.. இப்ப என்ன புதுசா? சிலை எல்லாம் திருடுறாரு? அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே?
சாமிகளிலேயே சர்ச்சை சாமியாராக கெத்தாக வலம் வருபவர், சுவாமி நித்யானந்தா. “நான் சொன்னால்தான் சூரியன் உதிக்கும் “என்று பரபரப்பு குறையாத பேச்சினை பேசுபவர் இவர். நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வேர்ல்ட் ஃபேமஸ் ஆனவர் தான், நம்மாளு நித்யானந்தா.
இந்த வகையில் போனவாரம் ஒரு வீடியோ ஒன்றை செய்துள்ளார். நீங்க நினைக்கிற மாதிரி வீடியோ இல்ல? இது வேற. உங்க ஆர்வம் புரியுது. இருந்தாலும் முக்கியமான விஷயத்தை சொல்லனும்ல? கேளுங்க.
அதாவது தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா?
“மேட்டூர் அணை பகுதியில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் முன் ஜென்மத்தில் நான் கட்டியது தான். அதனுடைய மூலவர் சிலை தற்போது என்னிடம் தான் உள்ளது” என்று அதிகாரபூர்வமாக கூறியிருந்தார்.
இதையடுத்து நித்யானந்தா மீது சிலைத் திருட்டு வழக்கு ஒன்றை தொடர சொல்லி, பால்வாடி பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் வேலுசாமி ஆகியோர் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.
மேட்டூர் அணை கட்டும் சமயத்தில் அக்கோவிலை சுற்றியிருந்த சுற்றுப்புறச் சுவர்கள், மேட்டூர் அணை கட்டுமானத்தின் போது தகர்த்து எடுக்கப்பட்டது. இந்தக் கோவில் மேட்டூர் அணை நீர் இருக்கும் போது எவர் கண்ணுக்கும் தெரியாது. ஆனால் நீர் வற்றினால் மட்டுமே அக்கோவில் கண்ணுக்குத் தென்படும். இந்தக் கோவில் பிரிட்டிஷார் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது என்பது வரலாறு.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
