India | இந்தியா
அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம்! புதிய தகவல்
தமிழைப் போல் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. தமிழில் கமல், இந்தியில் சல்மான்கான் என்றால் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மற்ற மாநிலங்களில் பல சீசன்கள் கடந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் மலையாளத்தில் இது வரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையல் மலையாளத்தில் பிக் பாஸ் இரண்டாவது சீசன் விரைவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கிடைத்த தகவலின் படி, ஒரு டீம் ஏற்கனவே போட்டியாளர்களுக்கான வேட்டையைத் தொடங்கியுள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிகழ்ச்சி திரைக்கு வர வாய்ப்புள்ளது.
நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது, நிகழ்ச்சியின் முதல் காட்சி பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் சீசனில் எந்தெந்த போட்டியாளர்கள் இடம்பெற வேண்டும் என ரசிகர்களின் பரிந்துரைகளையும் கோரியுள்ளது.
