ஒரே படத்தில் மக்களைக் கவர்ந்த நடிகர்.. தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் புது வில்லன்

தமிழ் சினிமாவிற்கு தற்போது வில்லன்கள் பற்றாக்குறை பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த வில்லன்கள் எல்லாம் இப்பொழுது காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மிகவும் சீரியசான வில்லன்கள் எல்லாம் இறந்து விட்டனர். இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு வில்லன்கள் தட்டுப்பாடு இருக்கிறது என்றே சொல்லலாம்.

சமீபத்தில் பா ரஞ்சித் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். படத்தின் பெயர் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் வில்லனாக ஒரு புது நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ காளிதாஸ் ஜெயராம். இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படமாம். ஆகையால் அந்தப் படத்திற்கு இரண்டாவது கதாநாயகனாக கலையரசன் நடித்துள்ளார்.

இந்த இரண்டு கதாநாயகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அந்த நடிகர் ஏற்கனவே ஒரே படத்தின் மூலம் மக்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். யார் இந்த நடிகர் என்று அனைவரும் முதல் படத்திலேயே ஆச்சரியம் அடைந்தனர். ஆர்யா நடித்து வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் டான்சிங் ரோசாக கலக்கியவர் அந்த நடிகர்.

இப்பொழுது தமிழ் சினிமாவிற்காக வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார் ஷபீர் கல்லரக்கல். அவரை மீண்டும் அடுத்தடுத்த படங்களில் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு தற்போது கூடுதல் சர்ப்ரைஸாக ஷபீர் கல்லரக்கல் வில்லனாக அவதாரம் எடுத்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் மிரள விடப் போகிறார்

இவர் சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பே ஆயுத எழுத்து, நெருங்கி வா முத்தமிடாதே, அடங்கமறு, பேட்ட, டெடி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சார்பட்டா பரம்பரையில் இவர் டான்ஸிங் ரோஸ் என இவருடைய ஸ்டைல், டான்ஸ் ஆடிக் கொண்டே பாக்ஸிங் செய்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கி ரசிகர்களுக்கு பிடித்தார் போல் படைத்தது போல் இந்த படத்திலும் அவருக்கு வில்லனாக தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் அவருக்கு  வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.

Next Story

- Advertisement -