Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறாத புதிய திருப்பம்.. வியந்துபோன ரசிகர்கள்!
மற்ற எந்த சேனல்களும் விஜய் டிவியை நெருங்க முடியாத அளவிற்கு விஜய் டிவியை கோட்டை போல் காத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த மாதம் நான்காம் தேதி தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் நடைபெறாத ஒரு புதிய திருப்பம் நடைபெற்று ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆஜித்தை வீட்டிலிருந்து அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த பிக்பாஸ் சீசனில் சில நாட்களுக்கு முன்பு ‘எவிக்சன் பிரீ பாஸ்’ ஆஜித்திற்கு கிடைத்தது. தற்போது இந்த எவிக்சன் ஃப்ரீ பாசை பயன்படுத்தி தான் ஆஜித் எவிட்டாகியும், வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வீட்டினுள் தொடர்வது பிக்பாஸ் சரித்திரத்திலேயே இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பேசிய கமல் ‘இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை’ என்ற தகவலை கூறி அனிதாவையும், சுரேஷ் சக்கரவர்த்தியும் நிம்மதி அடையச் செய்தார்.
இந்த செய்தியை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள், ‘என்னடா இது புதுசா இருக்கே.. வேற எந்த டிசைன்லடா ஆப்ப வைக்கப் போறீங்க!’ என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.

big-boss-balaji
