புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சர்வைவல் நிகழ்ச்சியில் நடந்த புது திருப்பம்.. கேலிக்கூத்தாக மாறிய வேடர்கள்.!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரு அணியாக பிரிந்து பலவிதமான டாஸ்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இது வரை வேடர்கள் அணி மட்டுமே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. காடர்கள் அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டாம் வாரத்திற்கான கேப்டன் பதவி யாருக்கு என்ற போட்டியை நடத்தியுள்ளனர். இப்போட்டியில் வேடர்கள் அணியை சேர்ந்த பார்வதி தான் எப்படியாவது கேப்டன் ஆகிவிட வேண்டும் என்று அதிகமாக உள்நீச்சலடித்து பார்த்தார். ஆனால் அவருக்கு வேடர் அணியிலிருந்து ஓட்டு கிடைக்கவில்லை. அணியினர் ஒரு குழுவாக இணைந்து பெசன்ட் ரவிக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்தனர்.

ஆனாலும் பெசன்ட் ரவியை காட்டிலும் அம்ஜத்கான் சிறப்பாக விளையாடி கேப்டன் பதவியை கைப்பற்றினார். குழுவின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், தனி ஒருவனாக போராட வேண்டும் என்பதை சர்வைவர் நிகழ்ச்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாக பெசன்ட் ரவி கூறியுள்ளார்.

காடர்கள் அணியில் போட்டியிட்ட விஜயலட்சுமிக்கு, அணியினரின் அனைத்து வாக்குகளும் கிடைத்தது. நேரடியாக சரனுடன் மோதினால் ஜெயிப்பது கடினம் என்று சுதாரித்துக்கொண்ட விஜயலட்சுமி, லேடி கேஷை வைத்து இரண்டு முறை ஒத்திகை பார்த்துவிட்டு, அசத்தலாக விளையாடி தனது கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். காடர்கள் அணி ஒரு முறை கூட வெற்றி பெறாத இச்சூழலில் வேடர்கள் அணியை பார்த்து பயங்கரமான கேலியும் கிண்டலும் செய்து வருவது பார்வையாளர்களையே கடுப்பேற்றி வருகிறது.

என்னதான் விஜே பார்வதி பயங்கரமாக வாயடித்து வந்தாலும், போட்டி என்று வரும்போது தனது முழு கவனத்தையும், திறமையையும் வெளிக்காட்டி, டீமுடன் சிறப்பாக ஒத்துழைத்து வெற்றியடைய செய்கிறார் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான். வேடர்களின் அணி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

survivor-cinemapettai
survivor-cinemapettai

கடந்த எபிசோடுகளில் சிருஷ்டி டாங்கே எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் உலகத்தில் காயத்ரி ரெட்டி அமர்ந்திருக்கும் சூழலில் அடுத்து எலிமினேஷன் செய்யப் போகும் நபர் யார் என்று மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காடர்கள் அணியின் கேப்டனாக இருந்தவர் தான் காயத்ரி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News