புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

என்னது வலிமை படம் வினோத் கதை இல்லையா.? என்ன புது டிவிஸ்டா இருக்கே

நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு தற்போது வலிமை படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித், போனி கபூர், வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படம் விரைவில் பூஜையுடன் தொடங்குகிறது.

வரும் மார்ச் 9ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்தை வலிமை திரைப்படம் போல இல்லாமல் மிகவும் குறுகிய காலத்திலேயே எடுத்து முடித்து ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் போனி கபூர் முடிவெடுத்திருக்கிறார். இதனால் படக்குழுவினர் மிகவும் பரபரப்புடன் இருக்கின்றனர்.

இந்த படத்திற்கான கதையை வினோத் ஏற்கனவே அஜித்திடம் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் போது கூறியிருக்கிறார். அப்பவே அஜித்துக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. இதனால் இந்தக் கதையை நாம் நிச்சயம் செய்யலாம் என்று அஜித், வினோத்திற்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் கதை அஜித்தின் கதை என்ற ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஜித் தான் வலிமை படத்திற்கான கதையை பற்றி வினோத்திடம் கூறியிருக்கிறார். இந்த கதையை டெவலப் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டாராம்.

இதனால் வினோத் அஜித்துக்காக அந்த கதையை டெவலப் செய்து வலிமை திரைப்படமாக உருவாக்கி விட்டாராம். இந்த வலிமை திரைப்படமும் மிக குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வெளியிட தான் போனிகபூர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இடையில் கொரோனாவால் ஏற்பட்ட பல குளறுபடிகளால் படம் வெளியாவதற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

வலிமை படம் தாமதமாக வெளியானாலும் தற்போது அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் கதை அஜித் கூறியது தான் என்ற இந்த புதிய தகவல் அஜித் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News