Tamil Nadu | தமிழ் நாடு
இனி தியேட்டர்களில் டிக்கெட் வாங்க முடியாது.. அரசின் புதிய விதிமுறைகள்
வார விடுமுறை நாட்களில் தற்போது பல படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிவருகின்றன. அதிலும் ஒரு வாரம் படம் ஓடி விட்டாலே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பெரிய பட்ஜெட் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களை தியேட்டர்களில் 500 முதல் 1000 வரை டிக்கெட்டுகளை விற்பதாக குற்றம் எழுந்துள்ளது. இதனை தடுப்பதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் இனி டிக்கெட் தியேட்டர்களில் நேரில் சென்று வாங்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் மட்டும் புக்கிங் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பொதுமக்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், இதற்காக விலை நிர்ணயிக்கப்பட உள்ளது விரைவாக இது அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் இனி விற்க முடியாது, மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
