fbpx
Connect with us

ராகவா லாரன்ஸை போல ஆன்மீகத்தில் இறங்கிய தளபதி 63 வில்லன்… போட்டோ உள்ளே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸை போல ஆன்மீகத்தில் இறங்கிய தளபதி 63 வில்லன்… போட்டோ உள்ளே!

தளபதி 63 தற்போது விறுவிறுப்பான ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை பிரமிப்பாக பேசப்பட்ட வேலைக்காரன் பட செட்டை விட பிரம்மாண்டமாக போடுகின்றனர்.

இப்படத்தில் டேனியல் பாலாஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் மற்றும் தற்போது வெளிவந்து சூப்பர் ஹிட்டான வடசென்னை படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு டேனியல் என்ற பெயர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய சித்தி சீரியலின் கதாபாத்திரத்தின் மூலம் பெற்றார். இவர் தற்போது ஆவடியில்  புதிதாக ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டி பூஜை செய்வது போல் உள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அதில் மார்ச் 13ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் அர்ஜுன் ஹனுமான் பக்தன் என்பதால் ஹனுமானுக்கு கோவில் ஒன்றை கட்டி பூஜை செய்து கொண்டாடினார். ராகவா லாரன்ஸும் இதைப் போன்று கோவில் கட்டி தனது ஆன்மீகத்தை  ரசிகர்களிடையே வெளிப்படுத்தி கொண்டாடினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top