Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாஸ்க் என்ற பெயரில் பாலாஜியையும் சம்யுக்தாவையும் கோத்துவிட்ட பிக் பாஸ்.. மீன் மார்க்கெட் போலான பிக்பாஸ் வீடு!
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக விதவிதமான டாஸ்க்களைக் கொடுத்து வருகின்றனர் நிகழ்ச்சி குழுவினர்.
அந்தவகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ‘ஒய் பிளட் சேம் பிளட்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டாஸ்க்கை பயன்படுத்தி வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்கள் மற்றவர்கள் மீது உள்ள தங்களுடைய பகை, கோபம், வன்மம் போன்றவற்றை தீர்த்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டாஸ்க் மூலம் பாலாஜிக்கும் அர்ச்சனாவிற்கு இடையே பெரும் பிரச்சனை மூண்டது. ஏனெனில் அர்ச்சனாவின் அன்பு பொய்யானது என்று பாலாஜி வெளிப்படையாக கூறியதோடு, ரியோ, கேபி, சோம், நிஷா ஆகியோருக்காக தான் அர்ச்சனா விளையாடுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பாலாஜியை ரவுண்ட் கட்டி திட்டி தீர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்யுக்தாவிற்கும் சனம் கால் செய்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். இதனால் பிக்பாஸ் வீடு மீன் மார்க்கெட் போல் ஆனது.
எனவே இவ்வாறு பிக்பாஸ், புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்து வீட்டில் கொளுத்தி போட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.
