2.0 படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் புகைப்படம்
சிறந்த படங்களுக்கான 64-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்சன் தலைமையிலான குழு இதை அறிவித்தது.
சிறந்த நடிகராக அக்ஷய் குமார் விருது பெறுகிறார். ‘ருஷ்டம்’ படத்தில் நடித்தற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இவர் பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.
இதை பாராட்டும் வகையில் 2.0 படக்குழு அக்ஷய் குமார் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.
2.0 படத்தில் அக்ஷய் குமார் கெட்-அப் அனைவரையும் ஆச்சர்ய படுத்திய நிலையில்,மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி ட்ரேன்ட் ஆகி வருகிறது.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பது உறுதியான தகவல். அதேசமயம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% நிறைவடைந்துள்ளதாம்.
https://twitter.com/2point0_Rajini/status/850289482595282944
