நம்ம முன்டாசுப்பட்டி படத்துல முனீஸ்காந்த் ஒரு படம் நடிச்சுருக்கேன், அதுல ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் எல்லாமே ஒரே ஆளுதான்னு காமெடி பண்ணுவாங்கள்ல ஆனால் அதை உண்மையாவே ஒரு இயக்குனர் செஞ்சு ஆச்சர்யப்பட வைச்சுருக்காருங்க.

muneeskanth

சில ஆண்டுகள் முன்பு வெளிவந்து பல சர்ச்சைகளை செய்த படம்தான் வெங்காயம். இத்தனைக்கும் இது நல்ல கருத்துக்களை சொன்ன நல்ல படம்தாங்க. அப்புறம் என்ன சர்ச்சைனு கேக்குறிங்களா? ஜாதகம் என்பது பொய் இதுதான் கதை, போதாதா சர்ச்சைக்கு…

சரி நம்ம கதைக்கு வருவோம் இப்போ அந்த வெங்காயம் படம் எடுத்த இயக்குனர் ராஜ்குமார், உலகத்தில் யாரும் செய்யாத ஒரு சாதனை செய்திருக்கிறார். அவரே ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஹீரோவின் நண்பர்கள், வில்லனின் அடியாட்கள் இப்படி நாற்பது கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

vengayam-tamil-movie-stillsபோதாத குறைக்கு நம்ம T.R போல கதை, திரைக்கதை, வசனம், இசை இப்படி 24 வித வேலைகளை செய்துள்ளார்.

ஐநூறு பேர் நிறைந்த கூட்டம் போன்ற ஒரு காட்சியில் அத்தனை நபர்களாகவும் இவரே நடித்துள்ளார். இவர் படமாக்கிய அத்தனை காட்சிகளையும் எவ்வாறு எடுத்தார் என்று ப்ளுப்பர்ஸ் வேறு எடுத்து வைத்துள்ளார்.

 

Vengayam Tamil Movie Stills

இவரது சாதனை இனி யாராலும் முயன்று பாக்க முடியாதது என்று சினி தொழில் நுட்ப வல்லுனர்கள் சொல்கின்றனராம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நம்ம இரவு பாடகன் பாபு கணேஷின் சாதனையையே தம்பி முரியடிச்சுட்டாரே!!!