தமிழகத்தில் காகிதத்தால் ஆன ரேஷன்கார்டுகளுக்கு முடிவுகட்டும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகளால்  மாநிலம் முழுவதும் புதிய ரேஷன்கார்டுகள் அச்சிடும் பணியும், விண்ணப்பம் வழங்குவது போன்றவைகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதியை பயன்படுத்த முடியாமல் ஏராளமானோர் தவித்து வந்தனர்.

இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல், அந்தந்த பகுதி இ-சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.