Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலாவை வச்சு செஞ்ச பிக் பாஸ்.. இதுக்குதான் ஆணவத்தில ஆடாதன்னு சொல்றது!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் இந்த வாரம் லக்ஜரி பட்ஜெட்டிற்காக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த டாஸ்க் முழுவதும் பாலா பத்திரத்தை திருடி வைத்தது மட்டுமல்லாமல் திமிராகவும் நடந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோவில் பாலாஜியை வச்சு செஞ்சிருக்காரு பிக் பாஸ்.
அதாவது இந்த டாஸ்க் முழுவதுமே பாலாஜி சற்று திமிராக ஆணவத்துடன் நடந்து கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், பிக் பாஸும் கடுப்பாகி உள்ளார்.
எனவே, இன்று பாலாஜியை டாஸ்க் நன்றாக செய்யவில்லை என்றும், டாஸ்க்கை புரிந்துகொண்டு அதன்படி செயல்படுமாறும் கண்டித்துள்ளார் பிக் பாஸ்.
மேலும் டாஸ்க்கை யாரும் புரிந்து கொள்ளவே என்று கூறிய பிக் பாஸ் லக்ஜரி பட்ஜெட்டிற்க்கு பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதனால் இன்றைய எபிசோடில் பாலாஜி ஜெயிலுக்கு போக அதிக வாய்ப்புள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் புரோமோ வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
