ஓவியா நடிக்க இருக்கும் களவாணி 2 படம் பண சிக்கலால் பாதியிலேயே நிற்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

கிராமத்து பெண்ணாக கோலிவுட்டில் ஓவியாவை அறிமுகப்படுத்திய படம் களவாணி. சற்குணம் இயக்கி இருந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் ஓவியாவிற்கென ஒரு இடம் உருவாகியது. தொடர்ந்து, நடித்த அவர் கிளாமர் ரூட்டில் அடியெடுத்து வைத்தார். அதுவே அவரது திரை வாழ்விற்கு சூனியமாக அமைந்தது. வாய்ப்புகளும் குறைந்தது.

தமிழில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்தார் ஓவியா. வாய்ப்பு இல்லாததால் தான் உள்ளே வந்தார். ஆனால், அதுவே அவருக்கு பெரிய வெற்றியாக அமையும் என அவருக்கு முதலில் தெரியவில்லை. வீட்டுக்குள் அனைவருக்குமே யாரோ ஒருவரை பற்றி குறை மட்டுமே கூறிக்கொண்டு இருக்க, அடப்போங்கப்பா என தனி ரூட் பிடித்தவர் ஓவியா தான்.

அதிகாலையில் பிக்பாஸ் கேமராவிடம் ஒரு பனானா, க்ரீன் டீ கொடுங்க ப்ளீஸ் என கெஞ்சியது, இரவு மழையில் ஆட்டம் போட்டது என அவரை ரசிகர்களுடன் நெருக்கமாக்கியது. வீட்டில் அனைவருமே ஒதுக்கும் போது கூட எல்லாரையும் தெறிக்க விட்டார். ஆனால், அவர் வீட்டில் கடைசியாக இருந்த வாரம் ரசிகர்களுக்கு அவர் வெளியில் வந்தாலே போதும் என்றாகி விட்டது. கடைசியில் நீச்சல் தொட்டியில் தற்கொலை வரை முயன்று வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முதன்முதலில், ஓவியாவின் ரசிகர்கள் தான் அவருக்கு ஆர்மி தொடங்கினர்.

அதிகம் படித்தவை:  ஓவியாவின் பெருந்தன்மை! ஆச்சர்யப்பட்ட தயாரிப்பாளர்

இன்னும் அவரின் குணத்துக்காவே லைக் லிஸ்ட்டில் முதல் ஆளாக வைத்திருக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறிய பிரபலங்கள் பலரும் வந்த வாய்ப்பை இழுத்தப்போட்டு கொண்டனர். ஆனால் ஓவியா பெரும்பாலான வாய்ப்புகளை நிராகரிக்கவே செய்தார். சிம்பு இசையமைக்கும் 90 எம்.எல், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் காட்டேரி என சொற்ப படங்களில் மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். தொடர்ந்து, சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்திலும் ஓவியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பும் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. படத்தை விரைவில் வெளியிடுவார்கள் எதிர்பார்த்த ஓவியா ஆர்மிக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது ஒரு பிரச்சனை.

அதிகம் படித்தவை:  நயன்தாராவை பின்னுக்கு தள்ளி நெ.1 இடத்தை பிடித்த 'ஓவியா '. அதிர்ச்சியில் நயன்தாரா.!

நயன்தாரா நடிப்பில் டோரா படத்தை சற்குணம் தயாரித்தார். அப்படத்திற்கு பணம் போட்டது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் என்பவர் தானாம். குறிப்பிட்ட பணத்தை விட அதிகமாக ரூ.60 லட்சம் அதிகமாகியதால், பஞ்சாயத்து தயாரிப்பாளர் பக்கம் போனது. சற்குணமும் அடுத்த படத்தில் கொடுக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அது குறித்து வாய் திறக்கவே இல்லையாம்.

தற்போது, தனக்கு பணம் கொடுத்து விட்டு, கே2 வை வெளியிட உத்தரவிடுங்கள் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நேமிசந்த் ஜபக். சற்குணம் என்ன ஆவாரோ? அட படத்த விடுங்கப்பா ஓவியா ஆர்மி வெயிட்டிங்!