India | இந்தியா
2021ல் வாட்சப் சேவையில் புதிய விதிமுறைகள்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு!
தற்போது தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் செயலி வாட்சப் (whatsapp).
இந்த நிறுவனம் தற்போது 2021 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயனாளர்கள் புதிய சேவை விதிமுறைகளை பின்பற்றும்படி அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
எனவே வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு பிறகு, புதிய விதிகளை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏற்காவிட்டால் அவர்களுடைய கணக்கு டெலிட் செய்யப்படும். அதனால் இந்த புதிய விதிமுறைகள் என்ன? என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் வரும் வாரத்தில் வெளியிடும்.
ஆகையால் வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பெற புதிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சூழ்நிலை பயனாளர்களுக்கு இருப்பதால், புதிய விதிமுறைகள் பாதுகாப்பதாகவும் பயனாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவையின் மூலம் பயனாளர்களின் டேட்டா பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேக்கர்கள் செய்யும் திருட்டுத்தனமான வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதுபோன்ற விதிமுறைகளை வாட்ஸ்அப் நிறுவனம் கையாள உள்ளது.

wtsapp
