சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. மக்களின் நன்மதிப்பை இழந்தவர்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதால் மக்கள், ஒரு உண்மையான, ஆளுமையுள்ள, நேர்மையான, தன்னலமில்லாத அதிரடி தலைவர் கிடைக்கமாட்டாரா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையின் ஒருசில இடங்களில் ‘மக்கள் வாழ வேண்டும் என்றால் நீங்கள் ஆள வேண்டும்’ என்ற வாசகங்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் நகரத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.

அரசியலில் ஈடுபட சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பல்வேறு கட்சிகள், ரசிகர்கள், நலம்விரும்பிகள் என பல தரப்பினரும் வலுயுறுத்தி வரும் நிலையில், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இது தொடர்பாக அவ்வப்போது வதந்திகள் பரவினால், அதற்கு தனது தரப்பு விளக்கத்தை மட்டும் கொடுத்து வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.