Tamil Cinema News | சினிமா செய்திகள்
“காக்க காக்க” பன்ச் வசனத்தை கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் 2 – போலீஸ் அத்தியாயம் படக்குழு !
Published on
TP2
2.0 என பட தலைப்பில் இருந்தே தங்களின் கலாய்த்தல் வேலையே ஆரம்பித்தனர், அதன் பின் முதல் லுக் போஸ்டர், பாடல் , டீஸர் அந்த அனைத்துமே கிணடல்களின் உச்சம் தான்.
சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக், நடிகையர் திலகம், காலா, சர்க்கார் என ஒரு புறம் இருந்தாலும் ஹாலிவுட்டின் பேட்மேன், கோலிவுட்டின் சின்ன கவுண்டர் என அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து 20 க்கும் மேல் லுக் போஸ்டர்கள் வெளியிட்டுள்ளார் இந்த டீம்.

TP 2
சூர்யாவின் காக்க காக்க பன்ச் வசனத்தில் உள்ள “பயமே கிடையாது” வார்த்தையை “பயப்படுவோம்” என மாற்றியுள்ளார் இவர்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 12 என அறிவித்துள்ளார்.

TP 2
