Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலிவுட் ஹீரோயின்களின் புதிய சம்பளப்பட்டியல்.. முதலிடத்திற்கு இவங்கள அடிச்சுக்க ஆளில்லை!
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் சம்பளம் ஒவ்வொரு படத்திற்கும் மாறுபடும். ஏனென்றால் ஒரு படம் ஹிட்டானால் தயாரிப்பாளர் கூடுதலாக சம்பளம் கொடுப்பார்.
அதேபோல் தோல்வியைத் தழுவினால் பேசிய சம்பளத்தில் இருந்து தயாரிப்பாளர் கொஞ்சம் குறைக்க பார்ப்பார்கள்.
இந்த வகையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹீரோயின்களின் புதிய சம்பள பட்டியலை தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே இந்தப் பட்டியலில் நடிகை நயன்தாரா ரூ. 4 கோடி வரை சம்பளத்தை பெற்று முதலிடத்தில் உள்ளார். ஏனென்றால் நயன்தாரா நடித்த படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் அவருக்கு சம்பளம் அதிகரித்துள்ளது.
இவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளத்தை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல் நடிகைகள்
- திரிஷா, எமிஜாக்சன், தமன்னா – ரூ. 1.50 கோடி
- ஸ்ருதிஹாசன் – ரூ. 1 கோடி
- கீர்த்தி சுரேஷ் – ரூ. 80 லட்சம்
- அஞ்சலி – ரூ. 70 லட்சம்
- ரெஜினா – ரூ. 60 லட்சம்
- ஷ்ரேயா – ரூ. 50 லட்சம்
- ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த், ஸ்ரீவித்யா, நிவேதா பெத்துராஜ் – ரூ. 40 லட்சம்
- நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் – ரூ. 35 லட்சம்
- பிரணிதா, பாவனா – ரூ. 30 லட்சம்
- அனுபமா பரமேஸ்வரன் – ரூ. 25 லட்சம்
- ஷ்ரத்தா ஸ்ரீநாத் – ரூ. 10 லட்சம்
இவ்வாறு கோலிவுட்டில் உள்ள முன்னணி கதா நாயகிகளின் சம்பளப்பட்டியல் வெளியானதை ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலை தளங்களின் வாயிலாக தெரிந்து கொள்கின்றனர். மேலும் இந்த தகவலானது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.
