தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான தலைவி நயன்தாரா ஐயா படத்தின்மூலம் அறிமுகமாகினார். இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பயணித்தாலும் நாளுக்கு நாள் அவரது ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தனது கையில் அடுத்தடுத்து பல படங்களை வைத்திருக்கும் நயன்தாரா தன வாழ்வின் முக்கிய திருப்பமாக ஒரு படம் அமையும் என்று சொல்லி இருக்கிறார்.nayanthara stills

அந்த படம்தாங்க கொலையுதிர் காலம். இந்த படத்தில் நயன்தாரா தவிர மற்ற நட்சத்திரங்கள் யார் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. படத்தின் first look கடந்த நவம்பர் வெளியானது.

அதிகம் படித்தவை:  சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

பில்லா 2, உன்னை போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலோட்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இசை மட்டுமல்லாது இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

சரி அது என்ன புது அவதாரம்னு கேக்குறிங்களா? இந்த படத்துல நயன்தாராவிற்கு காதும் கேட்காதாம், வாயும் பேச முடியாதாம். இதற்கு முன் நானும் ரவுடிதான் படத்தில் காது கேட்காமல் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஊமையாகவும் நடித்திருப்பதால் தன் நடிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், தனது வாழ்வில் திருப்பு முனையாக கட்டாயம் இந்த படம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நயன்தாரா.

அதிகம் படித்தவை:  பீகாரின் பிரபல கொள்ளையன் பிடிபட உதவிய நயன்தாரா ! எப்படி தெரியுமா ?

Nayanthara-Doraஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே விரைவில் டீசரை எதிர்பார்க்கலாம்.