Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரௌபதி இயக்குனரின் அடுத்த பட ஹீரோ, தலைப்பு வெளியானது- செம்ம மாஸ் தான் பா
ப்ரஜின் நடிப்பில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி. மோகன் இயக்கிய இரண்டாவது படம் ‘திரௌபதி’.
ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் நாடகக் காதல்களை தோலுரிக்கும் என மார்க்கெட்டிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக சிலர் படமெடுக்க, அவர்களின் கோட்பாடை வேறுவிதமாக சித்தரித்ததே இப்படத்தின் வெற்றிக்கு காரணம்.
திரௌபதி படத்தின் ஹீரோ ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ரிசி.
திரௌபதி படம் வெளி வருவதற்கு முன்னதாகவே இயக்குனர் தான் ஸ்கிரிப்ட்களை வைத்திருப்பதாகவும் அடுத்தடுத்து இவருடன் மட்டுமே படம் இணையப் போவதாக தெரிவித்திருந்தார்.

g mohan richard rishi
எனது அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனவும் படத்தை பற்றி கூறினார். தலைப்பு விரைவில் வெளிவரும் என தெரிவித்தார். இன்று காலை பூஜை போடப்பட்டது.
இப்படத்திற்கு ருத்ர தாண்டவம் என் தலைப்பு வைத்துள்ளதாக காலை 11.32 மணிக்கு ட்விட்டரில் வெளியிட்டார்.

ruthra thandavam
ரிச்சர்ட் ரிசி மற்றும் ஜி மோகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அமோகமாக இருப்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இந்த படமும் சரித்திரம் படைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.
