Connect with us
Cinemapettai

Cinemapettai

sarpatta-pasupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த புது படத்தில் கமிட்டான சார்பட்டா வாத்தியார்.. புகைப்படத்துடன் வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் தனது பன்முக நடிப்பு திறமையால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர்தான் நடிகர் பசுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கூத்துப்பட்டறை என்ற மேடை நாடக குழுவில் இருந்து தான், தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். இருப்பினும் இவருடைய இயல்பான நடிப்பினால் இவர் நடித்த அரவான் திரைப்படம் முதல்  தற்போது வெளியான சார்பட்டா பரம்பரை படம் வரை, கதாநாயகர்களை விட இவருடைய பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் அதிகமாக பேசப்படும்.

அதன் காரணமாகத்தான் தனது 52வது வயதிலும் கதாநாயகனாக நடிப்பதற்கு புதிய படம் ஒன்றிற்கான பூஜை இன்று, பாடல் பதிவுடன் துவங்கியுள்ளது. இந்தப்படத்தில் இவருடன் ரோஷிணி, அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் புரொடக்சன் தனது ஆறாவது படைப்பாக தயாரிக்க உள்ளது. மேலும் இந்தப் படத்தை ராம் சங்கையா இயக்கவுள்ளார். கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கவுள்ளார்.

pasupathi

pasupathi

மேலும் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இதில் சம கால மனிதர்கள் வாழ்வதற்கான போராட்ட சூழ்நிலையில் தங்களது சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க முழுக்க சித்தரித்து காண்பிக்கப்பட உள்ளது.

pasupathi

pasupathi

இந்தப் படத்தில் நடிகர் பசுபதி தனக்கென தனித்துவமான கதைக்களத்தை உருவாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த படத்தை குறித்த முழு விவரமும் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது

Continue Reading
To Top