Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.!
எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த திரைப்படம் நியூ இந்த திரைப்படம் 2004 ம் ஆண்டு திரைக்கு வந்தது இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் ரீமேக் ஆகும், மேலும் படத்தில் சிம்ரன், தேவயானி, கிரண் ராத்தோட் என பல நட்சத்திரங்கள் நடித்தார்கள்.
படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார், படம் பலத்த சர்ச்சைகளுக்கு இடையே திரைக்கு வந்தது, சர்ச்சைகளை சந்தித்தாலும் அப்பொழுதே 28 கோடி வசூல் சேர்த்தது, படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது பிரபல மாஸ் நடிகர்.
ஆம் படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தார் இவருக்கு ஜோடியாக ஜோதிகா கமிட் ஆனார், படத்தின் போஸ்டர் கூட ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் போஸ்டர் ரிலீஸ் ஆனதோடு சரி அதன் பிறகு இந்த படத்தின் எந்த தகவலும் வெளிவரவில்லை அப்படியே அமுங்கி போனது.

ajith-jyothika
இந்த படத்தின் கதை மீது இருந்த ஒருவிதமான உறுத்தல் தான் அஜித் இந்த படத்தை ட்ராப் செய்ததற்கு காரணம் என கூறுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து.
