Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்லிம் லுக்கில், 10 வயது குறைந்தது போல் மாறிய அஜித்.. டிரெண்டாகும் தலயின் வேற லெவல் புகைப்படம்.!
இணையதளத்தில் நடிகர் அஜித்தின் புதிய ஸ்லிம் லூக் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
H.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித், படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
வலிமை படம் சூட்டிங் சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கின, அதில் வில்லன் நடிகர் கார்த்திகேயா பங்குபெறும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
அஜித் பங்கேற்காத காட்சிகளை மட்டும் அங்கே படமாக்கினர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத், ராமோஜிராஜ் பிலிம்சிட்டியில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த ஹீரோயின் ஹூமா குரேஸி, கார்த்திகேயா ஆகியோரும் ஷெட்யூலில் பங்கேற்கிறார்கள், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஐதராபாத்தில் சில ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்துள்ளார். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
செம ஸ்லிம்மாக இருக்கும் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

thala-ajith
